×

நடிகர் விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: புலி பட சம்பளத்தை மறைத்ததாக ரூ.1.5 கோடி அபராதம் வருமான வரித்துறை உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்று கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்கான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், விஜய் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு முதல் வழக்காக நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பு வழங்குகிறார்

Tags : Vijay ,Chennai ,High Court ,Income Tax Department ,Tiger ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலையொட்டி துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வருகை