அந்தியூர், பிப். 5: பர்கூர் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து தாய்- மகள் படுகாயம் அடைந்தனர். திருச்சி சின்னக்கடை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45). தனியார் கம்பெனி ஊழியர் இவரது மனைவி ஜெயஸ்ரீ (43). இவர்களது மகள் பூரணி (17). பூரணியை மைசூரில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்க்க செந்தில்குமார் குடும்பத்துடன் காரில் புறப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பர்கூர் மலைப்பாதை வழியாக நேற்று காலை வந்தனர். 2வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காரில் சிக்கியவர்களை மீட்டனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட செந்தில்குமார், ஜெயஸ்ரீ, பூரணி ஆகிய 3 பேரும் அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
