×

சித்தாளுடன் குடும்பம் நடத்திய மேஸ்திரி தற்கொலை

ஈரோடு, பிப். 5: ஈரோட்டில் மனைவியை பிரிந்து, சித்தாளாக வேலைக்கு வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை குறுக்கு வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). கட்டிட மேஸ்திரி. இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். அனிதா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மணிகண்டன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தை பிரிந்து, சென்றார். அதன்பின் சித்தாளாக வேலைக்கு வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 6 மாதமாக ஈரோடு கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டத்தில் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். கடந்த 2ம் தேதி மணிகண்டன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Erode ,Thiruchengode Road, Pallipalayam, Namakkal district… ,
× RELATED பெருந்துறையில் அண்ணா நினைவு தின அமைதி ஊர்வலம்