- மானாமதுரை
- தெற்கு ரயில்வே மஸ்தூர் தொழிற்சங்க தொழிலாளர்கள் சங்கம்
- ஜனாதிபதி
- சிவகுமாரின்
- கிளை செயலாளர்
- பாலமுருகன்
மானாமதுரை, பிப். 4: தெற்குரயில்ேவ மஸ்தூர் யூனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரயில்வே தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மானாமதுரை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். கிளை செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சங்கரதாஸ் வரவேற்றார். உதவி கோட்ட செயலாளர்கள் சீதாராமன், விஜயேந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைவர் இருளப்பன் நன்றி கூறினார்.
