×

சிவராத்திரியை முன்னிட்டு தரிசனத்திற்கு வைக்கப்பட்ட லிங்கம்

ராஜபாளையம்,பிப்.16: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி அமச்சியார்புரம் தெருவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலய யோகாசன பயிற்சி மையத்தில் வழிபாடு நடந்தது. தேசிய அளவில் பிரசித்தி பெற்ற 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான ஜார்கண்ட் மாநிலம், தியோகரில் உள்ள வைத்தியநாதர் லிங்கம் மக்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது.

வைத்தியநாதேஷ் வரராக உள்ள சிவபெருமானை வழிபட்டால், ஆத்மாவை பீடித்திருக்கும் தீய குணங்கள் என்ற நோயை குணப்படுத்தி பரம சுகம், மகிழ்ச்சி மன நிறைவும் முக்தியும் வழங்குவதாக மக்களின் நம்பிக்கையாகும். நாளை வரை காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Shivratri ,Rajapaliam ,Brahma ,Iswariya Vidyalaya Yogasana Training Centre ,Maha Shivratri Amachiarpuram Street ,Jharkhand ,
× RELATED காரியாபட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி