கம்பம், பிப்.16: தேனி மாவட்டம், கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ராஜாத்தி (57). இவரது கணவர் இறந்து விட்டதால், அவரது மகள் தீபா வீட்டில் வசித்து வந்தார். இவர் தினமும் கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர், மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு வாங்கிவிட்டு, அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற வேன் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ராஜாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிந்த கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
