×

மணல் குவியலை அகற்ற கோரிக்கை

தேவாரம், பிப்.16: தேவாரம், கோம்பை, மேலசிந்தலைசேரி, தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமி நாயக்கன்பட்டி, தே.சிந்தலைசேரி விலக்குப் பகுதிகளில் சாலைகளில் அதிக அளவில் மணல் சேர்ந்து குவியல்களாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

வேகமாக வரும் டூவீலர்கள் சறுக்கி விழும் நிலை உள்ளது. கிராமப் பகுதிகளில் இருந்து மெயின் ரோட்டுக்கு வரும் போது மெயின் ரோட்டில் வரும் வாகனங்களை பார்க்க முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த மணல் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Thevaram ,Gombai ,Melachinthalaiseri ,Thamminayakkanpatti ,Lakshmi Nayakkanpatti ,De. Chinthalaiseri ,
× RELATED திண்டுக்கல் அருகே கஞ்சா விற்றவர் கைது