- இந்திரா காந்தி
- திண்டிவனத்தில்
- செல்வப்பெருந்தகை
- முதல் அமைச்சர்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- மு.கே ஸ்டாலின்
சென்னை: திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
விழும்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் மையப்பகுதியில் உள்ளது இந்திரா காந்தி பேருந்து நிலையம். கடந்த 55 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த பேருந்து நிலையத்தை பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து புதிதாக கட்டப்படும் நிலையத்துக்கு ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ என பெயர் வைக்கப்ப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கம் போல இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்ற பெயரிலே புதிய பேருந்து நிலையம் செயல்பட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு ‘இந்திரா காந்தி பேருந்து நிலையம்’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து செல்வபெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பேருந்து நிலையம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நீண்ட காலமாக செய்பட்டு வந்தது. இந்த பெயரில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையம் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை மாற்ற வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு சூட்ட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் நான் கோரிக்கை வைத்தேன். அதனை பரிசீலித்து நான் கேட்டதற்கு இணங்க, முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பேருந்து நிலையம் என திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு பெயர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
