×

பண பலம் இருக்கு… மக்கள் பலம் இல்ல… அதிமுகவை சீண்டும் தவெக

மதுரை: அதிமுகவிடம் பண பலம் இருக்கலாம், மக்கள் பலம் இல்லை என தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் களத்தில் தேஜ கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள், போவார்கள் அவர்களை கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

அவர்கள் எங்களை அழைக்காமல் இருப்பது நன்மைக்கே. எங்களை அழைக்கவில்லை என்றால் ரொம்ப சந்தோஷம். அதிமுகவின் கடுமையான விமர்சனங்களை கடந்துபோகிறோம். கூட்டணி குறித்து தவெக தலைவர் விஜய் அறிவிப்பார். விஜய்யை முதல்வராக ஏற்பவர்களோடுதான் கூட்டணி. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு. இது கொள்கை சார்ந்த முடிவு.

அதிமுக ஊழல் கட்சி என்றால் அதிலிருந்த முன்னாள் அமைச்சர்களை, நிர்வாகிகளை தவெகவில் சேர்ப்பது ஏன் என டிடிவி.தினகரன் பேசியுள்ளார். இப்படி பேசியவரின் பின்னணி என்ன? நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. தவெக தலைவர் விஜய், நானும் ஊழல் செய்ய மாட்டேன்; என்னுடன் உள்ளவர்களையும் ஊழல் செய்ய விட மாட்டேன் என தெரிவித்துள்ளார். அதிமுகவிடம் பண பலம் இருக்கலாம். மக்கள் பலம் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Thaveka ,AIADMK ,Madurai ,General Secretary ,Publicity ,Arunraj ,Teja alliance ,
× RELATED அம்பை அதிமுக வேட்பாளர் இசக்கி...