×

பிப்ரவரி 4ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு

 

சென்னை: அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் பிப்.4ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 4.2.2026 – புதன் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கட்சிப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Etamuga District Secretaries ,Chennai ,Akkatsi Leadership Council ,Adimuka District Secretaries ,Akkatsi ,General Secretary ,All India Development Corporation ,Assembly Opposition Leader ,
× RELATED அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு...