துறையூர், ஜன. 30: உப்புலியபுரம் அருகே டூவீலர் மரத்தில் மோதி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிந்தார்.
திருச்சி மாவட்டம் உப்புலியபுரம் அருகே நாகநல்லூர் ஏரிக்காடுவை சேர்ந்த சரவணன் மகன் சங்கீத் (26). இவர் லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. சண்முகி என்ற மனைவி ஒரு ஆண், 10 மாதம் பெண் குழந்தை உள்ளது.
நேற்று டூவீலரில் கொப்பம்பட்டியில் இருந்து மளிகை சாமான் வாங்கி கொண்டு முத்தையாபாளையம் வழியாக நாகநல்லூர் செல்லும் போது, மரத்தில் மோதி சம்பவ இடத்திலே சங்கீத் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த உப்புலியபுரம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
