- கோல்டென் ஜீம்
- திருச்சி
- குடியரசு தினம்
- கும்பகோணட்டான் சாலை, திருவண்ணைக்கோவில், திருச்சி
- திருச்சி மேன்மேக்கர் ஜிம்
- சாம்பிஸ் ஜிம்
- மதன் ஜிம்
திருச்சி, ஜன.28: குடியரசு தினத்தையொட்டி திருச்சி திருவானைக்கோவில் கும்பகோணத்தான் சாலையிலுள்ள கோல்டன் ஜிம்மில் உடற்பயிற்சி வீரர்களுக்கு இடையே இன்டர் ஜிம் பளூதூக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மேன்மேக்கர் ஜிம், சேம்பியின் ஜிம், மதன் ஜிம் மற்றும் கோல்டன் ஜிம் சார்ந்த 50கும் மேற்பட்ட உடற்பயிற்சி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியை பொன் தமிழரசன் துவக்கி வைத்தார். கவுன்சிலர் அபீஸ் முத்துகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மதன்குமார், ஜிம் உரிமையாளர் ராஜேந்திரகுமார், துணைப்பதிவாளர் (ஓய்வு) செல்வராஜ், பெல் ஜிம் பயிற்சியாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
இதில் கோல்டன் ஜிம்மை சார்ந்த கண்ணன் இரும்பு மனிதர் என்ற பட்டத்தை வென்றார். கோல்டன் ஜிம் நிறுவனர் சந்திரசேகரன் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு போட்டிகளை நடத்தினார். முடிவில் பாலாஜி நன்றியுரை கூறினார்.
