- சமயபுரம்
- தமிழ்நாடு அரசு
- மன்னச்சநல்லூர் காவல் நிலையம்
- திருச்சி மாவட்டம்
- 77வது குடியரசு தினம்
- தமிழ்நாடு காவல்துறை
சமயபுரம், ஜன.29: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல்நிலைய ஆய்வாளருக்கு தமிழக அரசு விருது வழங்கியுள்ளது. 2026ம் ஆண்டி 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்டு காவல்துறை பிரிவில் “தகைசால் பணிக்கான விருது” தமிழக காவல்துறை சேர்ந்த 21 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
இதில் பலவேறு காவல் நிலையங்களிலும் தற்போது திருச்சி மாவட்டத்திலும் சிறப்பாக பணியாற்றி வரும் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் பணியினை பாராட்டி நேற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக திருச்சி கலெக்டர் சரவணன் விருது வழங்கினார்.அதனைத்தொடர்ந்து ஆய்வாளருக்கு மண்ணச்சநல்லூர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மகேஷ்குமார், முத்துராமகிருஷ்ணன், சுரேஷ் மற்றும் காவலர் வாழ்த்து தெரிவித்தனர்.
