×

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருச்சி, ஜன. 30: திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை அருகே நேற்றுமுன்தினம் கஞ்சா விற்பனை நடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டு அங்கு கஞ்சா விற்ற திருச்சி வயலூர் சாலை குமரன் நகர் பேங்கர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த தாடி கோபால் (30) என்கிற வாலிபரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

 

Tags : Trichy ,Srirangam ,Kollidakkarai, Srirangam, Trichy ,
× RELATED வையம்பட்டியில் 5 கிலோ புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது