×

உப்பிலியபுரம் அருகே கிராம வேளாண்மை பணி அனுபவ திட்டம்

துறையூர், ஜன. 29: உப்பிலியபுரம் அருகே சோபனபுரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தங்கி வேளாண்மை பணிகளை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே சோபனபுரத்தில் இமயம் வேளாண்மை கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள், கிராம வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் சூர்யா பிரபாகரன், ஸ்ரீ தனுஷ், ஸ்ரீகாந்த், சுபாஷ், சுந்தர், துளசிதரன், வசந்த், வாசுதேவன், வேல்முருகன், வினோத், விஸ்வா ஆகியோர் செயல்முறை விளக்கம் செய்தனர்.

இதன்படி விஸ்வா நீல ஒட்டும் பொறி பற்றி விளக்கினார். இந்த பொறியின் மூலம் இலை பேன் கட்டுப்படுத்தலாம். அடுத்து மாணவர் ஸ்ரீகாந்த் உயிரியல் முறை படி நோய் கட்டுப்பாடு பற்றி விளக்கினார். அதன் பிறகு, வாழைத்தோட்டம் சென்று வாழை மகசூலை அதிகறிக்க வாழை இடை உழவு உத்திகள் மற்றும் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர்.

 

Tags : Uppiliyapuram ,Thuraiyur ,Agricultural College ,Sobanapuram ,Himayam Agricultural College ,Technical College ,Trichy ,
× RELATED துவரங்குறிச்சி அருகே 10அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது