- சிவசுப்ரமணிய சுவாமி கோவில் தேர்த்திரு
- தர்மபுரி
- முருகன்
- நிர்வாக அலுவலர்
- குமாரசாமிப்பேட்டை
- சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
- தொண்டு அறக்கட்டளைத் துறை
தர்மபுரி, ஜன.30: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயில், அறநிலையத் துறையின் கட்டுபாட்டின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் கடந்த 27ம் தேதி முதல் வரும் 6ம் தேதி வரை தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 1ம் தேதி தைப்பூச விழாவும், 2ம் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் தேர் இழுத்தலும், 3ம் தேதி காலை 8 மணிக்கு மேல் சுப்ரமணியர் தேர் பெண்கள் மட்டும் தேர்நிலை பெயர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சுப்ரமணியர் தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
