×

குழந்தை விரலில் சிக்கிய மோதிரம்

திருவொற்றியூர், பிப்.24: திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரை சேர்ந்தவர் மோகன். இவரது ஒன்றரை வயது மகன் கோகுல் பிரசன்னா. நேற்று முன்தினம் இரவு, இந்த குழந்தையின் கை விரலில் அணிந்திருந்த தங்க மோதிரம், இறுக்கமாக இருந்ததால், பெற்றோர் கழற்ற முயன்றனர். ஆனால், விரலில் மோதிரம் மாட்டிக்கொண்டு கழற்ற முடியாததால், விரல் வீங்கி குழந்தை கதறி அழுதது. இதையடுத்து மோகன், குழந்தையை தூக்கிக் கொண்டு திருவொற்றியூர் தீயணைப்பு நிலையத்திற்கு சென்றார். அங்கு, நிலைய அலுவலர் பற்குணம் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் உபகரணங்கள் கொண்டு அந்த தங்க மோதிரத்தை, குழந்தைக்கு எவ்வித காயமும் இன்றி பாதுகாப்பான முறையில் அகற்றினர். இதனால், பெற்றோர் நிம்பதியடைந்தனர்.

Tags : Thiruvottriyur ,Mohan ,Raja Shanmugam ,Nagar ,Gokul Prasanna ,
× RELATED பெருங்குடி குப்பை கிடங்கை சீரமைக்க...