×

பவானியில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

பவானி, ஜன. 29: பவானி தாலுகா அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பவானி வட்டத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ரகுநாத், வட்ட பொருளாளர் கோகிலாம்பாள், வட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்தி முன்னிலை வகித்தனர்.

கிராம நிர்வாக அலுவலகங்களை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பவானி வட்ட துணைத் தலைவர் குமார், வட்ட துணைச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது.

 

 

Tags : Village Administrative ,Bhavani ,Administrative ,Bhavani Taluka Office ,Block ,President ,Ramasamy ,Block Secretary ,Raghunath ,Treasurer ,Kokilambal ,Block Coordinator ,Karthi… ,
× RELATED ஸ்கூட்டர் பெட்டியில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு