×

கொடுமுடியில் நாளை முதல் காரைக்கால்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும்

கொடுமுடி, ஜன. 26: கொடுமுடி ரயில் நிலையத்தில் காரைக்கால்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-16187) நாளை (ஜன.27) முதல் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக ரயில்வே நிர்வாகத்திற்கு கொடுமுடி பகுதி மக்கள் நன்றி ெதரிவித்து உள்ளனர்.

காரைக்காலில் இருந்து தினமும் மாலை 4.30 மணிக்கு புறப்படும் காரைக்கால்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், கொடுமுடி ரயில் நிலையத்திற்கு இரவு 10.05 மணிக்கு வந்தடைந்து, மறுநாள் காலை 6.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. இதனால் கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக கேரள மாநிலம் செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் நிறுத்தம் பெரிதும் பயனளிக்கும் என தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கோரிக்கை நிறைவேறியதால் கொடுமுடி வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

Tags : Kodumudi ,Railway Administration ,
× RELATED சங்க பொதுக்குழு கூட்டம்