ஈரோடு, ஜன. 28: ஈரோடு அடுத்த சூளை ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த மல்லி நகரை சேர்ந்தவர் பெரியசாமி (26). மார்க்கெட்டிங் பிரிவு ஊழியர். இவர் கடந்த 10ம் தேதி அவரது வீட்டின் முன் பைக் நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவரது பைக் மாயமாகி இருந்தது.
அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சேலம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தினேஷ் குமார் (21), சேலம் அன்னதானபட்டி காந்தி சிலை முதல் வீதியை சேர்ந்த வேலவன் (23), சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தகார்த்தி (25), என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
