×

ஆசனூர் வனப்பகுதியில் காரை வழிமறித்து துரத்திய யானை: அச்சத்தில் உறைந்த பயணிகள்

சத்தியமங்கலம்: ஆசனூர் வனப்பகுதியில் காரை வழிமறித்து துரத்திய ஒற்றை காட்டு யானையால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நடமாடும் காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியில் உள்ள சாலைகளில் பகல் நேரங்களில் உலா வந்து அவ்வழியாக செல்லும் வாகனங்களை வழி மறிப்பது வாடிக்கையாக உள்ளது. நேற்று மாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் 2 கார்களில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.

அடர்ந்த வனப்பகுதியில் மாவள்ளம் பிரிவு அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்த ஒற்றை காட்டு யானை திடீரென காரை வழிமறித்து பிளிறியபடி காரை துரத்தியது. காரில் இருந்த பயணிகள் யானையைக் கண்டு அச்சத்தில் உறைந்ததோடு காரை மெதுவாக பின்னோக்கி நகர்த்தினர். அப்போது சாலையில் நடமாடிய தெரு நாய்களும் காட்டு யானையை கண்டு தலை தெறிக்க ஓடின. சிறிது நேரம் அங்குமிங்கும் நடமாடிய காட்டு யானை பின்னர் மெதுவாக நடந்து வனப் பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து கார்கள் புறப்பட்டுச் சென்றன. காட்டு யானை காரை வழிமறித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Asanur ,Sathyamangalam ,Asanur forest ,Sathyamangalam Tigers Archive Forest ,
× RELATED கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில்...