×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தின் 2வது நிலை 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 2வது நிலையின் 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, 2வது நிலையின் 1வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் வடசென்னை அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Watchennai Thermal Power Plant ,Chennai ,Watchenai thermal power plant ,Analmin ,plant ,Attipattu ,North Chennai ,
× RELATED புதுக்கோட்டை, திருச்சியில்...