சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹில்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: எஸ்ஐஆர் பணியில் வாக்காளர்களை கசக்கி பிழிகின்றனர்.பிஎல்ஓக்களிடம் நூற்றுக்கும் அதிகமான தாக்கீடு இருப்பில் உள்ளது. இன்று வரை முறையாக வாக்காளர் கைகளில் அது கொடுக்கப்படவில்லை.
வாக்காளர்களுக்கு வரும் 30ம் தேதி என்று இறுதி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு வாக்காளர்களை அச்சுறுத்தும் செயல் ஆகும். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தப் பணியை முறையாகவும் பரபரப்பு இன்றியும் மேற்கொள்ள வேண்டும்.
