- அரியலூர்
- ஜெயங்கொண்டம்
- ஜெயன்கொண்டம் சட்டமன்றத் தொகுதி
- பதிவு
- இந்திய தேர்தல் ஆணையம்
- தமிழ்
- நாடு சட்டமன்றத் தேர்தல்
*கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது
அரியலூர் : அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்கு பதிவிற்கான இயந்திரங்கள் தேர்தெடுக்கப்பட்டும் கூட்டமானது கலெக்டர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு முதல் நிலை சரிபார்ப்பு செய்யப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்காளர்கள் வாக்களித்தது பதிவானதை உறுதி செய்யும் வகையில் பார்வைக்கு எடுத்து காட்டும் விவிபேட் இயந்திரம் ஆகியவை ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்கு பதிவிற்கான இயந்திரங்கள் முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் (1st Randomization) ஒதுக்கீடு செய்யப்பட்டது.அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி முன்னிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்பு இந்த பணியானது மேற்கொள்ளப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஆணைய இணையதளத்தின் மூலம் 20 சதவீதம் வாக்கு பதிவு இயந்திரம், 20 சதவீதம் கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 30 சதவீதம் விவிபேட் இயந்திரங்கள் என ரிசர்வும் சேர்த்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன் விவரம் பின்வருமாறு:அரியலூர் சட்டமன்ற தொகுதி வாக்கு பதிவிற்காக 396 வாக்கு பதிவு எந்திரங்கள், 396 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 429 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதே போல ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்கு பதிவிற்காக, 384 வாக்கு பதிவு எந்திரங்கள், 384 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 416 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் (1st Randomization) தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்கு பதிவிற்கான மின்னணு இயந்திரங்களின் பட்டியல்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பணிகளில் பயன்படுத்துவதற்காக, அந்தந்தத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பாதுகாப்பு அறைகளில் (Strong Room) கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சித்ரா, வட்டாட்சியர் (தேர்தல்) கண்ணன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
