சென்னை: குடியரசு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளனர். முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை; உழைப்பாளர் சிலை பகுதி மற்றும் ஆளுநர் மாளிகை முதல் மெரினா கடற்கை வரை சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளனர். சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
