வாஷிங்டன்: ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதில் 5,000 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈரானை நோக்கி பெரும் படையை அனுப்பி வைத்திருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். ஈரானை குறிவைத்து மத்திய கிழக்கில் அமெரிக்கா குவித்துள்ள படைகள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர் கப்பலும் அதனுடன் 3 அழிப்புக் கப்பல்களும் இந்த வார தொடக்கத்தில் தென் சீனக் கடலை விட்டு வெளியேறி மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்கின.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த கப்பல்கள் விரைவில் அவை பஹ்ரைன் துறைமுகத்தில் இருந்த வந்த 3 கடலோரப் போர்க் கப்பல்களுடனும், பாரசீக வளைகுடாவில் கடலில் இருந்த வந்த மற்ற 2 அமெரிக்க கடற்படை அழிப்புக் கப்பல்களுடனும் இணையும். இதுதவிர, அமெரிக்க ராணுவ சரக்கு விமானங்கள் மத்திய கிழக்கை நோக்கி செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
