- பாதுகாப்பு
- திருவிடைமருதூர்
- திருவிடைமருதூர் தெற்கு சாலை
- தஞ்சாவூர் மாவட்டம்
- நெடுஞ்சாலைகள் துறை
- தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
திருவிடைமருதூர், ஜன.23: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு வீதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது, பேரணியில் ஓடும் பேருந்தில் ஏறாதே, மஞ்சள் கோட்டை தாண்டாதே, தலைகவசம் உயிர்கவசம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
மேலும், சாலை பாதுகாப்பு தொடர்பான வாசகங்களை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், இளநிலை பொறியாளர், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள், திருவிடைமருதூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், கல்லூரியின் சாலை பாதுகாப்பு குழு தலைவர், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
