×

தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

விருதுநகர், ஜன.29: விருதுநகர் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் புதுப்பிக்க இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 2026-2027ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பிப்.29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விவரங்கள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு, 044-22501006 (113) என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது detischennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அறிந்து கொள்ளலாம்.

 

 

Tags : Virudhunagar ,Collector ,Sugaputra ,Virudhunagar district ,
× RELATED தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்