×

இளம்பெண் தற்கொலை

பாலக்காடு, ஜன. 29: கேரள மாநிலம் பாலக்காடு வாணியம்குளம் அருகே பொணாட்டைச் சேர்ந்தவர் அலீனா ஜோண்சன் (25), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 27ம் தேதி ஷொர்ணூர் அருகே குனத்தரையிலுள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு கலந்துகொள்ள சென்றுள்ளார். அதன்பின் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் உடனடியாக ஷொர்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். அப்போது குனத்தராவை அடுத்த ஆராணி கரிங்கல் குவாரி அருகே மரத்தில் அலீனா ஜோண்சன் தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கியுள்ளார். போலீசார் அந்த பெண் உடலை ைகப்பற்றி பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

 

Tags : Palakkad ,Aleena Johnson ,Ponat ,Vaniyamkulam ,Palakkad, Kerala ,Gunatharai ,Shoranur ,
× RELATED கரியமலையில் குரங்குகள் தொல்லை: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை