- காங்கிரசு மாவட்டம்
- ஜனாதிபதி
- திருத்தணி
- சட்டமன்ற தொகுதி
- வழக்கறிஞர்
- சசிகுமார் திருத்தானி
- திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரசுக் குழு
- திருத்தானி நகர காங்கிரஸ் குழு
- ராமகிருஷ்ணன்
திருத்தணி, ஜன.23: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, வழக்கறிஞர் சசிகுமார் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டார, நகர நிர்வாகிகளை சந்திப்பு மற்றும் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருத்தணி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன், புதிய மாவட்ட தலைவரை நகர அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, நகர நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பொதட்டூர்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.கே.ரமேஷ் மாவட்ட தலைவரை வரவேற்றார். நகர நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, பள்ளிப்பட்டு நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் சிவகுமார் தலைமையில் புதிய மாவட்ட தலைவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. இந்சந்திப்பின் போது முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பரம் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
