×

சினிமா கதாசிரியர் சுருண்டு விழுந்து பலி

 

போரூர், ஜன.20: சென்னை வடபழனி ஆற்காடு சாலை விஜயசாந்தி குடியிருப்பை சேர்ந்தவர் கணேஷ் ராஜா (80). சினிமா கதாசிரியரான இவர், வயது மூப்பு காரணமாக தனது மகனுடன் வசித்து வந்தார். கணேஷ் ராஜாவின் மகன் சிவக்குமார் (52), பெங்கல் பண்டிகைக்காக பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால், கணேஷ் ராஜா குன்றத்தூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருந்துள்ளார்.
அங்கிருந்து, நேற்று காலை 10 மணிக்கு தனது வீட்டிற்கு செல்ல, பேருந்தில் வடபழனிக்கு வந்துள்ளார். அப்போது, கணேஷ் ராஜா பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் வடபழனி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி, விரைந்து வந்த போலீசார் கணேஷ் ராஜாவை மீட்டு, மருத்துவ குழுவினர் உதவியுடன் சோதனை செய்த போது, அவர் இறந்தது தெரியவந்தது.
அவரது உடமைகளை சோதனை செய்த போது, அதில் இதய நோய்க்கான மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Porur ,Ganesh Raja ,Vijayashanti ,Vadapalani Arcot Road, Chennai ,Sivakumar ,Bengali ,
× RELATED திருவள்ளூர் அருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது