- டிடீவி
- சரந்தர்
- Edapadi
- தெற்கு மாவட்டம்
- திருச்சி
- தினகரன்
- அம்மா மக்கள் முன்னேற்றம் சங்கம்
- அத்தமுகவ்
- எடப்பாடி
- பழனிசாமி
திருச்சி: டிடிவி.தினகரன் அதிமுகவில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக் கட்சியை துவக்கி நடத்தி வருகிறார். இப்படி தனிக்கட்சி துவங்கியதில் இருந்து எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று கூறியதுடன் அவர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தொடர்ந்து டிடிவி பேசி வந்தார். இதனிடையே எதிரிக்கு எதிரி நண்பர் என்பதுபோல் ஓபிஎஸ்சும் டிடிவி.தினகரனும் ஒன்றாக இணைந்து எடப்பாடியை எதிர்த்து வந்தனர். தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் எடப்பாடிக்கு எதிராகவும் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம்வகித்த டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று கூறி வந்தனர். இந்தநிலையில் திடீரென அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இன்று இணைந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவிக்கு 7தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாகவும் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தேர்தலில் டிடிவி.தினகரன் மனைவி போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது. இதனால் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் சேர பல நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அமமுக வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியை தீவிரமாக டிடிவி எதிர்த்து வந்ததால்தான் அவருடன் கைகோர்த்து நின்றோம். ஆனால் யாரை எதிர்த்து, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்து கட்சி துவங்கினாரோ அந்த நபரிடமே டிடிவி சரணடைந்துள்ளார். முக்கிய நிர்வாகிகளிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். இதனால் அமமுகவில் இருந்து தென் மாவட்ட நிர்வாகிகள் விலகமுடிவு செய்துள்ளனர். இவ்வாறு கூறினர்.
