×

கூட்டணியில் இணைந்துள்ள தினகரனுக்கு எடப்பாடி வாழ்த்து

 

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டி.டி.வி.தினகரனுக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவு: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : EDAPPADI ,DINAKARAN ,ALLIANCE ,Chennai ,T.D. ,National Democratic Alliance ,D. ,Extraordinary General Secretary ,Edapadi Palanisami ,Ammuka ,Jayalalitha ,Tamil Nadu ,
× RELATED அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த...