×

கர்நாடகாவில் 5 மாநகராட்சிக்கு வாக்கு சீட்டு முறையில் தேர்தல்

பெங்களூரு: கர்நாடகாவில் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் இருக்கும் 5 மாநகராட்சிகளுக்கு வரும் ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதையேற்று தேர்தல் நடத்தப்படும் என்று மாநில அரசு உறுதியளித்ததுடன் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுககளை கவனிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கும் அறிவுறுத்தியது. அதன்படி நேற்று மாநில தலைமை தேர்தல் ஆணையர் சங்ரேஷி முன்னிலையில் மாதிரி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அவர் கூறும்போது, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில் கீழ் இருக்கும் 5 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வசதியாக வாக்காளர் மாதிரி பட்டியல் வெளியிட்டுள்ளோம். வரும் மாநகராட்சி தேர்தலில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தாமல், பழையபடி வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

Tags : Karnataka ,Bengaluru ,Supreme Court ,Greater Bengaluru Authority ,
× RELATED தங்ககடத்தலில் சிக்கிய நடிகை...