மாஸ்கோ: இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபரில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று போரை நிறுத்தின. இந்த ஒப்பந்தத்தின் 2ம் கட்டமாக டிரம்பின் காசா அமைதி வாரியம் அமைக்கப்பட உள்ளது. இந்த வாரியம் புதிய சர்வதேச அமைப்பாக இருக்கும். இந்த வாரியத்தில் இணைய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்த வகையில், ரஷ்ய அதிபர் புடினுக்கும் அழைப்பு வந்திருப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் நேற்று உறுதிபடுத்தி உள்ளது. இது குறித்து கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவின் அழைப்பு பரிசீலனையில் உள்ளது’’ என்றார்.
