×

வந்தே பாரத் ரயில்களின் அடுத்தடுத்த அறிமுகங்கள்: 4.0 ரயிலை கொண்டு வர இந்திய ரயில்வே தீவிரம்

டெல்லி: வந்தே பாரத் 4.0 ரயிலை கொண்டு வர இந்திய ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களின் அடுத்த தலைமுறை ரயில்களை தயாரிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது. இதில் பிரமிக்க வைக்கும் அளவிற்கு பல்வேறு வசதிகள் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது.இந்தியாவில் சுமார் 800 கிலோமீட்டர் தூரம் வரையிலான நகரங்களுக்கு இடையில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. முழுவதும் ஏசி வசதிகள் உடன் விமானத்தில் இருப்பது போன்ற சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஏசி சேர் கார், எக்ஸ்கியூடிவ் சேர் கார் என இரண்டு விதமான பெட்டிகள் இருக்கின்றன. தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகள் தகவல் அமைப்பு, பயோ வேக்கம் கழிவறைகள், சுழலும் இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயன்பாட்டிற்காகவே வழித்தடங்கள் பிரத்யேகமாக மேம்படுத்தப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளில் 76 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அடுத்தகட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகம் செய்யும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில்கள் பயணிக்கின்றன. வந்தே பாரத் ரயில்கள் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.2019 முதல் 2022 வரை வந்தே பாரத் 1.0 ரயில்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தன. அதன்பிறகு வந்தே பாரத் 2.0 ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வந்தே பாரத் 3.0 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இதன் பிரதான சிறப்பம்சம் என்பது 52 வினாடிகளில் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு சீறிப் பாய்ந்து விடும்.

இதுதவிர இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான கப்லிங் இணைப்பில் மேம்பாடு, உயர்தர ஏசி வசதி, UV-C அடிப்படையிலான கிருமிகள் தாக்காத தொழில்நுட்பம், தீ கண்டறியும் நவீன வசதி, கவாச் பெட்டிகள், நவீன சிசிடிவி கேமராக்கள், முழுவதும் சீல் செய்யப்பட்ட தானியங்கி கதவுகள், ஓட்டுநர் – கார்டு தகவல் தொடர்பு பதிவு வசதி உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் நான்காம் தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், வந்தே பாரத் ரயில்களின் அடுத்தடுத்த அறிமுகங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் நிலையில், அடுத்த 18 மாதங்களில் வந்தே பாரத் 4.0 ரயிலை பயன்பாட்டுக்குக் கொண்டு வர இந்திய ரயில்வே தீவிரமாக தயாராகிறதுஇந்தியாவின் சொந்த ரயில் சிக்னல் அமைப்பான ‘கவச் 5.0’ உடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச தரம் மற்றும் பாதுகாப்பு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ‘export-quality’ வடிவமைப்பில் வந்தே பாரத் 4.0 உருவாக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Indian ,Delhi ,Indian Railways ,Union Government ,India ,
× RELATED கரூர் நெரிசல் வழக்கு விசாரணைக்காக...