பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி தேர்தல், வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என கர்நாடக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக அமைச்சரவை பரிந்துரையை ஏற்று அம்மாநில தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 369 வார்டுகளில் நடைபெறும் தேர்தலில் வாக்கு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
