மாமல்லபுரம்: நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்க உள்ளார். மாமல்லபுரம் அருகே, கோவளம் உபவடி நிலத்தில் சுமார் 5161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342.6 கோடியில் 1.6 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில், 6வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
ஆனால், கோவளத்தை தவிர்த்து மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியில் பக்கிங்காம் கால்வாய் (உபவடிவ நிலத்தில்) புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக தொடர்ந்து ஆய்வும் மேற்கொண்டனர். இந்நிலையில், ரூ.342.6 கோடியில் 6வது புதிய நீர்த்தேக்க கட்டுமான பணிக்கு நாளை காலை (19ம் தேதி) 11 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்கிறார்.
