- சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி
- வேடசந்தூர்
- சாலை பாதுகாப்பு வாரம்
- விருத்தாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
வேடசந்தூர், ஜன. 12: வேடசந்தூரில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சாரண சாரணியர் இயக்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
சாரண, சாரணியர் இயக்க ஆணையர் வெங்கடேசன், பள்ளியின் சாரண சாரணிய இயக்க ஒருங்கிணைப்பாளர் மீனாம்பிகை, சாரண, சாரணிய இயக்க மாணவ, மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர். மேலும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர். போக்குவரத்து காவலர்கள் ஜான்பீட்டர் மற்றும் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
