பெரம்பலூர், ஜன. 8: பெரம்பலூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2023 டிசம்பர் 1ம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை 6மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
