×

பெரம்பலூர் /அரியலூர் ஆ.ராசா எம்பியிடம் உறுதி தா.பழூர் அருகே புதிய வளர்ச்சித்திட்டப் பணிகள்

தா.பழூர், மார்ச் 12: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம் பகுதியில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் திட்டம் 2025-2026 திட்டத்தின் கீழ், கோடாலிகருப்பூர் கிராமத்தில், ரூ.200.00 லட்சம் மதிப்பீட்டில், கொள்ளிடத்தில் ஒரு கண் வடிகால் மதகு கட்டுதல். காரைக்குறிச்சி ஊராட்சி, அருள்மொழி கிராமத்தில் ரூ.350.00 லட்சம் மதிப்பீட்டில், கொள்ளிடத்தில் இடது கரையை புனரமைத்தல், ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கிவைத்தார்.

இந்நிகழ்வில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், உதவி பொறியாளர் நாவலடியன்,திமுக தா.பழூர் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை, ஒன்றிய அவைத்தலைவர் சூசைராஜ், மாவட்ட பிரதிநிதி தமிழ்ச்செல்வன், மாவட்ட அணி நிர்வாகிகள் கார்த்திகைகுமரன், குணசீலன், சம்மந்தம், தங்கபிரகாசம், முனைவர் முருகானந்தம், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மகாலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur ,Ariyalur ,A.Raza ,Tha.Pazhur. ,Tha.Pazhur ,Jayankondam Assembly Constituency ,Union ,Ariyalur District ,Kollidam ,Kodalikaruppur ,Karaikurichi… ,
× RELATED சட்டமன்றத்தேர்தல் பணிக்கு எல்லை பாதுகாப்பு படை குழுவினர் அரியலூர் வருகை