×

ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

பாடாலூர், மார்ச் 9: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கீதா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் (கிராம ஊராட்சி) முன்னிலை வகித்தார்.

ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பெண்கள் ஒரே மாதிரியான சேலை அணிந்து வந்து ஒருவருக்கொருவர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். முடிவில் உதவியாளர் துரைராஜ் நன்றி கூறினார்.

 

 

Tags : Women's Day ,Alathur Panchayat ,Union Office ,Patalur ,Alathur Panchayat Union Office ,Perambalur district ,Block Development Officer ,Sangeetha.… ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் 1300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு