×

தேமுதிக – விசிக நிர்வாகிகள் சந்திப்பு: பெரம்பலூரில் திமுக வெற்றிபெற பாடுபடுவோம்

பெரம்பலூர், மார்ச் 12: திமுக – தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் நேற்று பெரம்பலூர் நகரில் பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.இராசா எம்பியை, தேமுதிக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.சிவா ஐயப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்(தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிக்காக தீவிரமாக பாடுபடுவோம் என்று தேமுதிகவினர் உறுதியளித்தனர்.

இவர்களைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள கிருஷ்ணகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக ஆ.இராசா எம்பியை சந்தித்துப் பேசினர். பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்ட மன்ற தொகுதி தேர்தல்களில் திமுக கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற முனைப்புடன் களப் பணியாற்றுவோம் என உறுதி அளித்தனர். அப்போது திமுக மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணைச் செயலாளர் துரைசாமி, தலைமை செயற் குழு உறுப்பினர்கள் அட்சய கோபால், இராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர் மற்றும் தேமுதிக நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : DMDK ,VKC ,DMK ,Perambalur ,Deputy General Secretary ,Union Minister ,A. Iraza ,Palakkarai ,Perambalur… ,
× RELATED சட்டமன்றத்தேர்தல் பணிக்கு எல்லை பாதுகாப்பு படை குழுவினர் அரியலூர் வருகை