×

இந்திய மருத்துவ சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கோவை, ஜன. 7: கோவை இந்திய மருத்துவ சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்திய மருத்துவ சங்க கோவை அமைப்பின் 102வது தலைவராக டாக்டர் கோஷல்ராம் பொறுப்பேற்றார். புதிய நிர்வாக குழுவில் செயலாளராக பரமேஸ்வரன், நிதி செயலாளராக பாலமுருகன் பொறுப்பேற்றனர்.

விழாவில், முதன்மை விருந்தினராக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளையின் தலைவர் ஸ்ரீதர் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக காமன்வெல்த் மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜெயலால், ஹாஸ்பிடல் போர்ட் ஆப் இந்தியா தலைவர் அபுஹசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், 2026ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில தேர்வு ரவிக்குமார், 2027-ம் ஆண்டிற்கான மாநில தலைவர் தியாகராஜன், மாநில கவுரவ செயலாளர் திரவியன் மோகன், மாநில நிதி செயலாளர் சாலமன் ஜெயா, முன்னாள் மாநில செயலாளர் கார்த்திக்பிரபு ஆகியோர் வாழ்த்தினர். இதில், கோவை கிளையின் சார்பில் சர்க்கரை நோய், கண் தானம், போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு என மூன்று திட்டங்கள் துவங்கப்பட்டன.

 

 

Tags : Indian Medical Association ,Coimbatore ,Coimbatore Indian Medical Association ,Dr. ,Ghoshalram ,Parameswaran ,Nidhi… ,
× RELATED தனியார் பஸ்சில் பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு