×

காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

ராஜபாளையம், ஜன. 7: ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கூட்டம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா கூட்ட
அரங்கில் துணைத்தலைவர் என்.கே.ஸ்ரீகண்டன் ராஜா தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா வரவேற்று பேசினார். கூட்டத்தில் துணைத் தலைவர் பத்மநாபன், பொருளாளர் ராமராஜ் ஆகியோர் தீர்மானங்களை வழிமொழிந்து பேசினர்.

கூட்டத்தில் மூடப்பட்டுள்ள சுரங்க ரயில் பாதை திட்டத்தை விரைவாக செய்து முடிக்க வேண்டும், சிலம்பு ரயிலை தினசரி சென்னைக்கு இயக்க வேண்டும், கூடுதலாக செங்கோட்டை – மதுரைக்கு பகல் நேரத்தில் ஒரு ரயில் இயக்க வேண்டும், காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில் சிக்னல் அமைத்து போக்குவரத்தை பராமரிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கச் செயலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.

 

Tags : Gandhi ,Roundana ,Rajapaliam ,Rajapaliam Industry Trade Association ,B. A. C. ,Ramasamy Raja Meeting Hall ,Vice Chairman ,N. K. Held ,Srikandan Raja ,Venkateswara Raja ,Vice President ,Padmanapan ,Treasurer ,Ramraj ,
× RELATED சென்னை காவல் துறையில் 21...