பாலக்காடு, ஜன. 5: பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காவச்சேரி அருகே சாலையோரம் குடில் அமைத்து வசிக்கும் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த பாஜ தொண்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலத்தூர் அருகே போருளி பாடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் கடந்த 2ம் தேதி இரவு மதுபோதையில் காவச்சேரியில் புறம்போக்கு நிலத்தில் குடில் அமைத்து தனியாக வசிக்கும் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து மூதாட்டி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவர்கள் ஆலத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்ர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷை தேடி வருகின்றனர்.
