- தேசிய மருந்தக வாரம்
- ஜேஎஸ்எஸ்
- மருந்தகம்
- கல்லூரி
- ஊட்டி
- 64வது தேசிய மருந்தக வார கொண்டாட்டம்
- JSS பார்மசி கல்லூரி
- இந்திய மருந்து சங்கம்
- மருந்தக வாரம்
- ஊட்டி…
ஊட்டி, ஜன. 28: ஊட்டி ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் 64வது தேசிய மருந்தியல் வார விழா துவங்கியது. ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரி மற்றும் இந்திய மருந்தியல் சங்கம் ஆகியவை சார்பில் ஊட்டியில் உள்ள பார்மசி கல்லூரியில் ஒரு வாரம் மருந்தியல் வார விழா நடக்கிறது. முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.
இதில் எஸ்பி நிஷா, ஊட்டி அரசு மருத்துவமனை டீன் சீனிவாசன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.பி.சிங், கோவை கேஜி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பக்தவத்சலம், கோல் இந்தியா லிமிடெட் (இந்திய அரசு) இயக்குநர் மற்றும் தேயிலை வாரிய துணைத் தலைவர் ராஜேஷ் சந்தர் ஆகியோர் பேசினர்.
துணை முதல்வர் அருண் நன்றி கூறினார். விழாவில், ஒரு வார காலம் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆரோக்கிய சமையல், கோலம், ஓவியம், நடனம் உள்ளிட்ட போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
