×

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் பெரியாறு கால்வாயை நீட்டிக்க வேண்டும்: 15 ஊராட்சிகளில் தீர்மானம்

மேலூர், ஜன. 28: கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக மழைநீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றன. உரிய பாசன வசதி இல்லாததால், விவசாயமும் குடிநீரும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில் பெரியாறு பாசன கால்வாயை இதுவரை கால்வாய் வசதி இல்லாத 15 ஊராட்சிகளின் வழியாக நீட்டிப்பு செய்ய வேண்டும்.

குறிப்பாக பெரியாறு பாசன கால்வாயை கொட்டாம்பட்டி சூரப்பட்டி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கேசம்பட்டி, பட்டூர், கம்பூர், சேக்கிபட்டி, அய்யாபட்டி, மணப்பச்சேரி, பாண்டாங்குடி, சொக்கலிங்கபுரம், கொட்டாம்பட்டி, வலைசேரிப்பட்டி, சொக்கம்பட்டி,

தொந்திலிங்கபுரம், பொட்டப்பட்டி, பள்ளப்பட்டி, சூரப்பட்டி ஆகிய 15 ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் பெரியாறு பாசன கால்வாய் நீட்டிப்பு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Periyar canal ,Kottampatti union ,Melur ,Periyar ,canal ,
× RELATED பந்தலூரில் தேசிய வாக்காளர் தின பேரணி