பாலக்காடு, ஜன. 26: பாலக்காடு அருகேயுள்ள நூரணி வித்துணி சனீஸ்வரன் கோயிலில் குத்துவிளக்குகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து செய்தனர். பாலக்காடு நூரணி அக்ரஹாரம் அருகே வித்துணி சனீஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் புகுந்து குத்துவிளக்குகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதுவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரை சேர்ந்த கிருஷ்ணபிரசாத் (30), என்பவர் திருடியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாலக்காடு போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
