- மத்திய அமைச்சர்
- ராம்மோகன் நாயுடு
- விசாகப்பட்டினம்
- விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்
- போகபுரம்
- யூனியன் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள போகாபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
பணிகளை பார்வையிட்ட ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ரராம் மோகன் நாயுடு கூறுகையில், செயல்பாட்டில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 150 கிமீ சுற்றளவுக்குள் புதிய கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே இருக்கும் விமான நிலையத்தின் திறன் உச்சத்தை அடைந்து விட்டால் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு 150 கிமீ சுற்றளவு விதி பொருந்தாது என்றார்.
